வள்ளுவன் காட்டும் வாழ்க்கைத் துணைநலம்- பாகம் 2
தொழதெழுவாள் தொழு என்ற சொல்லானது வணங்கு என்பதை மட்டுமல்லாமல், கூடிநிற்றல்-இணைந்துநிற்றல்-இல்வாழ்க்கை என்ற பொருள்களையும் தருகிறது. எனவே, தொழுதெழுவாள் தொழுதுஎழுவாள், எழவாள் என்பது முன்னேறுவாள்-உயர்வடைவாள் என்பதாகும். துயில் விட்டெழுதல் அல்ல. அதாவது, தன்கொழுநனுடன் இல்வாழ்வில் இணைந்து இல்வாழ்க்கைக்கான காரியங்களில் ஒன்றுபட்டு உழைத்து வாழ்வில் உயர்வடைவாள்( காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து)
எழுதல்- உயர்வடைதல். எழுவாள்-உயர்வடைவாள்.
வள்ளுவர் வேறோரிடத்திலே -தெய்வத்தால் ஆகாது. எனினும் முயற்சிதன் மெய் வருந்தக் கூலி தரும் என்று கூறியவாறு, தெய்வத்தால் ஆகப்போவதில்லை. ஆனால் உடலுழைப்புக்கு கூலி கிடைக்கும். எனவே, உழைப்பால் உயர்வு பெற்று-நிறைவும்-அமைதியும்-இன்பமும் பெற்று.கொழுநனும் இன்புற வாழுவாள். இத்தகையவள்
பெய்யெனப் பெய்யும் மழை-பெய் ;என்று வேண்டியவுடன் பெய்கின்ற மழையைப் போன்றவள்.
நீண்ட நாட்களாக பயிர்கள் நீரின்றி வாடி வான்மழைபார்த்து நிற்கின்றன. நிலம் களரோடி-கானல் தெறித்து-வறுமை மிகுந்து-உயிரினங்கள் துன்புற்று நாடழிகின்ற நிலையில் மழையே ஒருதடவை பெய் என்று கேட்டவுடன் மழை பெய்யுமானால் எத்துணை இன்பம்.அவ்விதம் கேட்ட்வுடன் பெய்கின்ற மழையைப் போன்றவள். முயற்சி திருவினை ஆக்கும்
ஆதலால்;;, இல்லறம் சிறக்கப் பார்ப்பாரச் சுப்பிரமணியனைப் போல்--காணிநிலம் வேண்டும்- தூணில் அழகிய மாடம் வேண்டும்-பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் வேண்டும்-எல்லாவற்றையும் அநுபவிக்க ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பராசக்தியிடம் தொழுது நிற்காமல்--கொண்டவனுடன் இணைந்து நின்று இல்லறம் சிறக்கும்படி வாழ்பவள் பெய்யென்று கேட்டவுடன் பெய்யும் மழையைப் போன்று இன்பம் பயப்பவள். என்பதே வள்ளுவன்தந்த உண்மைப்பொருளாகும்.
அறிவுபூர்வமாகவும் நிகழக்கூடிய தன்மையாலும் இக்கருத்தே குறள் போன்ற நல்லேட்டின் கருத்தாகும். வள்ளுவன் பாயிரத்தில் கடவுள் வாழ்த்துக்கடுத்து வான் சிறப்பென்னும் அதிகாரம் மூலம் மழையே உயர்வானது எனக் காட்டியிருப் ;பதையும் நாமிங்கு நோக்குதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக